103. அருள்மிகு மனமோஹன கிருஷ்ணன் கோயில்
மூலவர் மனமோகன கிருஷ்ணன்
தாயார் ருக்மணி, சத்யபாமா
திருக்கோலம் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் யமுனா தீர்த்தம்
விமானம் ஹேமகூட விமானம்
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார்
இருப்பிடம் திருவாய்பாடி, உத்தரப்பிரதேசம்
வழிகாட்டி தற்போது 'ஆயர்பாடி' அல்லது 'கோகுலம்' என்று அழைக்கப்படுகிறது. டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் இரயில் பாதையில் உள்ள மதுரா இரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Gokulam Moolavarகண்ணபிரான் வெண்ணெயைத் திருடித் தின்று, மண்ணைத் தின்று, கோபியரை மயக்கி வளர்ந்த ஸ்தலம். வாயில் உலகத்தைக் காட்டியது, பூதகி என்னும் அரக்கியைக் கொன்றது உள்ளிட்ட பல திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம். ஆழ்வார்கள் பாடிய கோயில்களோ, மூர்த்திகளோ இப்போது இல்லை. தற்போது உள்ளவை பிற்காலத்தைச் சேர்ந்தவை.

மூலவர் மனமோஹன கிருஷ்ணன் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். ருக்மிணி, ஸத்யபாமா என்று இரண்டு தாயார் உள்ளனர். பகவான் நந்தகோபருக்கு பிரத்யக்ஷம்.

'கோகுல்' என்ற இடத்துக்கு 1 கி.மீ. தூரத்தில் 'புரானா கோகுல்' (பழைய கோகுலம்) என்ற இடத்தில் ஓர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வாசலிலேயே யமுனை நதி ஓடுகிறது. நந்தகோபர், யசோதா, பலராமர், ஒரு சிறிய மரத்தொட்டிலில் குழந்தை கிருஷ்ணன் உள்ளிட்ட மர விக்கிரகங்கள் உள்ளன.

பெரியாழ்வார் 10 பாசுரங்களும், ஆண்டாள் 5 பாசுரங்களும், திருமங்கையாழ்வார் 7 பாசுரங்களுமாக மொத்தம் 22 பாசுரங்கள் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com